சென்னை அருகே தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் சென்னை வெளிவட்ட சர்வீஸ் சாலையில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. இதனையடுத்து பீர்க்கன்கரணை போலீசார் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகளில் சிசிடிவி காட்சிகளைக்கைப்பற்றி அந்த சந்தேகத்திற்குரிய நபர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச்செல்ல முயன்றபோது போலீசார் முகமூடி ஆசாமியைக் கைது செய்தனர். விசாரணையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது பெருங்களத்தூரைச் சேர்ந்த மணிகண்டன்(30), என்பது தெரியவந்தது.
இவர் பல்வேறு செயின் பறிப்புச்சம்பவங்களில் சிக்காமல் சுற்றி வந்த நிலையில் நேற்று இவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து சென்னையில் இரண்டு இடங்களில் தொடர் செயின் பறிப்பு சம்பவம்:சென்னைஅருகே பெரம்பூர் வீனஸ் முதல் தெருவைச்சேர்ந்தவர் மீனா(42). இவர் துளசிங்கம் மெயின் ரோட்டில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது குருமூர்த்தி கார்டன் ஆவின் பால் பூத் அருகில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர், மீனாவை கீழே தள்ளிவிட்டுவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இதில் சிறு காயமடைந்த மீனா இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.
அதேபோல் சென்னை வியாசர்பாடி கக்கஞ்சி நகர் பெரியார் தெருவைச்சேர்ந்தவர் அன்னக்கிளி(52). அவர் வீட்டருகே வேப்பிலையை பறித்துக்கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் அன்னக்கிளியை கீழே தள்ளிவிட்டுவிட்டு, அவர் கழுத்தில் அணிந்து இருந்த நான்கரை சவரன் தங்கச்செயினைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.
தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட முகமூடி ஆசாமி ஒருவர் கைது அப்போது அவர் கத்தி கூச்சலிடவே அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேரும் தங்கச்சங்கிலியினை அங்கேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து செம்பியம் காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:லட்சக்கணக்கில் கலப்பட டீசல் விற்பனை... திமுக வார்டு கவுன்சிலரின் கணவர் கைது