திருச்சிமாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(46). இவர் மீது 2007 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராமலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக, மகளிர் காவல்துறையினர் ராமலிங்கத்தை தேடினா்.
ஆனால் ராமலிங்கம் அதற்குள்ளாக வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இதனால் க ராமலிங்கம் தேடப்படும் நபராக 2007 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். மேலும் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று (செப் 22) அதிகாலை கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து, கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள், கணினி மூலம் ஆய்வு செய்து பயணிகளை அனுப்பி கொண்டு இருந்தனர்.