சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவில் வசித்துவருபவர்கள் கார்த்திக், மனைவி தம்பதி. இவர்கள் இருவருக்கும் சர்வேஷ், சார்வின் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக், வேலாயுதம் என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வேலாயுதம் வேலையும் வாங்கி தராமல் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த சூழலில் இன்று வேலாயுதம், கார்த்திக்கை தொலைபேசியில் அழைத்து உங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது. அதற்கான நியமன கடிதத்தை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுகள் என தெரிவித்திருக்கிறார். இதனை நம்பி கார்த்திக்கும் தன் மனைவியுடன் எம்.கே.பி நகரில் உள்ள வேலாயுதம் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவருக்கு, சாய்பாபா பிரசாதம் சாப்பிடுங்கள் எனக்கூறி ஒரு பொடியை வேலாயுதம் கொடுத்துள்ளார். இதை வாங்கி இருவரும் சாப்பிட்டு முடித்தனர். பின்னர் கார்த்திக்கிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சந்தேமடைந்த அவர்கள் அங்கிருந்து கிளம்பி இருசக்கர வாகனத்தில் முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது கார்த்திக் வாகனத்தை நிறுவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.