சென்னை வடபழனி 100 அடி சாலை அன்னை அலுமினியம் ட்ரேடர்ஸ் கடை அருகில் பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டதாக வடபழனி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த நபர் ஜேம்ஸ் வேதராஜ்(62). இவர் எலக்ட்ரிஷன் வேலை செய்து சூளைமேட்டில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடபழனியில் உள்ள பிளாட்பாரத்தில் உறங்கச் சென்றபோது ராஜ்குமார் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.