செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரா (28), மறைமலை நகரிலுள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று (மே.9), இவருக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டை காலி செய்து, வேறு இடத்திற்கு மாற்றி, பொருட்களை எடுத்துச் செல்ல வேலை இருப்பதாக அழைத்துள்ளார்.
செங்கல்பட்டில் இளைஞர் வெட்டி கொலை - chengalpattu latest news
செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை
இதனால், தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற வீராவை, பொத்தேரி அருகே, 6 அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில், வீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் காவல் துறையினர் வீராவின் உடலைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:'எல்லோருக்கும் எல்லாம் என்பதே லட்சியம்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்