தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் வீட்டிற்குள் நுழைந்து இளைஞர் வெட்டிக் கொலை

காதல் போட்டியின் விளைவாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் வெட்டிக் கொலை
இளைஞர் வெட்டிக் கொலை

By

Published : Jul 10, 2021, 6:59 PM IST

சென்னை: தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (29). இவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில் வசித்துவந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 10) மதியம் தங்கராஜ் வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது.

இதில் தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உடனடியாக ஆர்.கே. நகர் காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

காதல் போட்டியில் கொலை?

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த தங்கராஜ், பாலாஜி ஆகிய இருவர் ஒரே பெண்ணை காதலித்துவந்தது தெரியவந்தது. இதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தங்கராஜ் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆர்.கே. நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:'வளரும் தமிழகம்' கட்சி நிர்வாகி படுகொலை: திருவாரூரில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details