தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி நபர் கொலை - பதறவைக்கும் சிசிடிவி காட்சி - பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி நபர் கொலை

சென்னை அமைந்தகரை அருகே பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

’பட்டப்பகலில்’ ஓட ஓட விரட்டி கொலை-வெளியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
’பட்டப்பகலில்’ ஓட ஓட விரட்டி கொலை-வெளியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

By

Published : May 20, 2022, 1:52 PM IST

சென்னை:அமைந்தகரை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த 18ஆம் தேதி பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி ஒருவரை கொலை செய்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (36) நிதி நிறுவன அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

ஏற்கனவே இறந்துபோன ஆறுமுகம் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அமைந்தகரை காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆறு பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (மே.19) ஆறுமுகத்தை கொலை செய்ததாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சென்னை செனாய் நகரைச் சேர்ந்த ரோஹித் ராஜ் (31) மற்றும் சந்திரசேகர் (28) ஆகியோர் சரணடைந்தனர். சரணடைந்த இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 4 பேரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆறுமுகத்தை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஆறுமுகத்தை விரட்டி வந்து, அவர்களது இருசக்கர வாகனத்தை கீழே போட்டு கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர். மீண்டும் அதே இருசக்கர வாகனங்களில் அவர்கள் தப்பிச் செல்வது பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க:'பேத்தியை காதலிக்காதே...' கண்டித்த தாத்தா படுகொலை!

ABOUT THE AUTHOR

...view details