சென்னை:அபிராமிபுரம் படவட்டான் தெருவில் வசித்து வருபவர் பொன்ராஜ் (52). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் உறவினரான தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் (32) உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி, அங்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இரு குடும்பத்தாருக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அற்புதராஜ் குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு பின்னர் அவர் மடும் நேற்று (நவ.12) நள்ளிரவு சென்னை வந்து அற்புதராஜ் வீட்டிற்குச் சென்று வீட்டில் தனியாக இருந்த அற்புதராஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவர்களின் உறவினர் மாடாசாமிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பொன்ராஜை கொலை செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.