சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோவை மர்ம நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவில் புகார் அளித்தனர்.
பள்ளி சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர் கைது! - A man has been arrested for sending nude images to school girl
சென்னை: இன்ஸ்டாகிராமில் பள்ளி சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை அனுப்புவதற்கு வாட்ஸ் அப் குழு அமைத்திருந்த கும்பல் பிடிப்பட்டனர்.
புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் மகளிர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆபாச வீடியோவை அனுப்பிய நபரின் ஐ.பி முகவரியை வைத்து கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற நபரை கைது செய்தனர். அந்த நபரின் செல்போனை ஆய்வு செய்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கக்கூடிய படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததும், வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி குழந்தைகள், பெண்களின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்துள்ளதை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்கள் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பகிரும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால் ஒட்டு மொத்த கும்பலையும் பிடிக்க தனிப்படை அமைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து அனகாபுத்தூரைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.