தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 வயது சிறுமியிடம் வரம்புமீறியவர் போக்சோவில் கைது! - 10 வயது சிறுமிக்கு முத்தம்

சென்னை: சூளை பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஒருவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

போக்சோ
போக்சோ

By

Published : Aug 31, 2020, 12:32 PM IST

சென்னை சூளை பகுதியில் பெற்றோருடன் 10 வயது சிறுமி வசித்துவருகின்றார். இவரது பெற்றோர் வீட்டில் மாவு விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) பெரியமேடு ஈவேரா சாலையில் வசிக்கும் சுந்தர் (33) என்பவர் சிறுமி வீட்டிற்கு வந்து அவரது தந்தையிடம் மாவு கேட்டுள்ளார்.

மாவு எடுப்பதற்காக சிறுமியின் தந்தை வீட்டினுள் சென்றபோது, வெளியே விளையாட வந்த சிறுமியை கட்டிப்பிடித்து சுந்தர் முத்தம் கொடுத்ததுடன், பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார். உடனடியாக, சிறுமி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, பெரியமேடு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன் பேரில் சுந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: மதுப்பிரியரால் நேர்ந்த விபரீதம்!

ABOUT THE AUTHOR

...view details