சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜோல்லிக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று (அக்.21) சுங்கத்துறை அலுவவர்கள் விமான பயணிகளிடையே தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை சேர்ந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின.
சென்னையில் 1.83 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்
துபாயிலிருந்து உள்ளாடைக்குள் மறைத்து சென்னைக்கு கடத்தவரப்பட்ட ரூ.47 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 1.83 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Etv Bharat
அதன்பின் தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது உள்ளாடை மற்றும் ஆசனவாய் பகுதிக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில் ரூ.47 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 83 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சுங்க சுங்கத்துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொச்சியில் தங்கம் திருடிய போலீசார் கைது..!