புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளி கலைஞர் நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி தங்கதுரை. இவர், பிப். 2ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, சத்தியா என்பவர் ஜாதி தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை இட்டிருந்ததைக் கண்டுள்ளார்.
அதில், "புதுச்சேரியில் ரெட்டி, நாயுடு, கிராமணி உள்ளிட்ட ஜாதி தலைவர்களைக் கொல்ல வேண்டும். பிரதமர் மோடியை போட தயார். 5 கோடி ரூபாய் தர யார் தயார்" எனப் பதிவிட்டுள்ளார். இது குறித்து தங்கதுரை அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.