சென்னை ஜெஜெ நகர் பகுதியில் கணவன் மனைவி இணைந்து சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ் (34), என்பவர் ஓட்டுநராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
நாளடைவில் டிராவல்ஸ் உரிமையாளரின் மனைவியோடு தர்மராஜின் நெருக்கம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு கடந்த ஆண்டு தெரியவரவே, தர்மராஜை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ், டிராவல் உரிமையாளர் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தர்மராஜை தேடி வந்தனர்.
கடந்த ஓராண்டாகவே தலைமறைவாக இருந்த தர்மராஜ், நேற்று (பிப்.03) மீண்டும் டிராவல்ஸ் உரிமையாளர் மனைவியிடம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார்.
இதனையறிந்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர், தர்மராஜை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சீர்காழி கொலை வழக்கு: குற்றவாளிகளைத் துண்டுத்துண்டாக வெட்டக்கோரி முதலமைச்சரின் பார்வைக்காக காணொலி...!