தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுசெய்தவர் கைது - பாலியல் வழக்கு

ஆவடி அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுசெய்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

#etvbharat#avadi#child#sexual#abuse#aquest#arrest#  child abuse  sexual harassment  chennai news  chennai latest news  chennai sexual harrasment case  latest news  tamilnadu news  chennai avadi child abuse case  சென்னை செய்திகள்  குற்றச் செய்திகள்  crime news  சென்னை ஆவடி சிறுமி பாலியல் வழக்கு  பாலியல் வன்கொடுமை  பாலியல் வழக்கு  பாலியல் வன்புணரவு
17 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு!!!

By

Published : Jun 19, 2021, 7:18 AM IST

Updated : Jun 19, 2021, 10:56 AM IST

சென்னை: ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவிக்கும், காமராஜ் நகரைச் சேர்ந்த சர்ஜுன் (19) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறிய சர்ஜுன், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதன் விளைவாக, மாணவி கர்ப்பமானார்.

இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கருவை கலைப்பதற்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் மருத்துவமனைக்குச் சென்ற காவல் துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான காவல் துறையினர் சர்ஜுனை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சர்ஜுனை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: முன்விரோதத்தில் சிறுவனை கழுத்தை நெரித்தவருக்கு சிறை

Last Updated : Jun 19, 2021, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details