விருதுநகர் மாவட்டம், கம்பிக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ஏ.குட்டி ஜெகன், கடந்த 2016ஆம் ஆண்டு மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரில், அருப்புக்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற தனது உறவினரின் புகாரை முறையாக விசாரிக்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு சென்ற தன்னை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரும், நகர காவல் நிலையத்தினரும், டிஎஸ்பியும் கண்மூடித்தனமாக தாக்கியதுடன், பொய் வழக்கில் பதிவு செய்து, உள்ளாடையுடன் லாக்கப்பில் அடைத்ததாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட டிஎஸ்பி, பெண் ஆய்வாளர், பெண் எஸ்.ஐ உள்ளிட்ட ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன் புகாரில் கூறியிருந்தார்.
இந்தப் புகாரை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் விசாரித்தபோது காவல் துறை அளித்த விளக்கத்தில் குட்டி ஜெகன் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனத் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையினர் மீது பொய் புகார் அளித்த வழக்கறிஞருக்கு அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: காவல் துறையினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் புகார் அளித்த வழக்கறிஞருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.
HRC
தொட்ர்ந்து ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், காவல் துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன், புகார்தாரரான வழக்கறிஞர் குட்டி ஜெகன் நிரூபிக்கவில்லை எனக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், பொய் புகார் அளித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக, ஏழி காவல் துறையினருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவும் குட்டி ஜெகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.