சென்னை:கேரளா மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர், நிகிதா. வயது(19). இவர் தாம்பரம் அருகே அனந்தபுரத்தில் பெண்கள் விடுதியில் தங்கி தாம்பரம் தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் நிகிதா இரும்புலியூர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் பகுதி நேரம் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நிகிதா வழக்கம்போல் இரும்புலியூரில் மழலையர் பள்ளிக்குச் சென்றபோது தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் அருகே செல்போனில் பேசியவாறு ரயில் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது அதிவேகமாகச் சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், செல்போனில் பேசிக் கொண்டவாறு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிகிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் முழுவதும் நசுங்கி, சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவி உயிரிழந்தார்.