தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம் - Department of School Education part time teachers

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம்
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம்

By

Published : Feb 1, 2023, 6:36 PM IST

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம்

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் இசை, தையல். ஓவியம். உடற்கல்வி ஆகிய சிறப்பு பாடப்பிரிவுகளில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் வேலை நேரம் என்ற அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டனர். 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு மாதம் 10,000 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பிற ஆசிரியர்கள் போல் தங்களையும் பணியை நிரந்தரம் செய்ய வேண்டுமென தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், திமுக ஆட்சி அமைந்த பின்னரும் நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இன்று (ஜனவரி 1) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்தபகுதி நேர ஆசிரியை ஷகிலாதேவி கூறும்பொழுது, பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

திமுக ஆட்சி அமைந்த உடன் தங்களுக்கு பணி நேர்ந்துவிடும் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், நிதி நிலையை காரணம் காட்டி தள்ளி போட்டு வந்தனர். எங்களின் ஒற்றைக் கோரிக்கையான பணி நிரந்தரத்தை முதலமைச்சர் செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் இருந்த நிலையில் தற்போது பத்தாயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகிறோம். பகுதி நேர ஆசிரியர்களுக்கான தங்களுக்கு சமூகத்தில் உரிய மதிப்பும் கிடைக்கவில்லை என கூறினார்.

இதையும் படிங்க: TN Rains: காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு இலங்கை கடற்கரையை கடக்கக் கூடும்!

ABOUT THE AUTHOR

...view details