தமிழ்நாடு

tamil nadu

மேலும் 479 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Feb 28, 2021, 7:12 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 479 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

A further 479 people were affected by corona
மேலும் 479 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை:மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 50 ஆயிரத்து 652 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 479 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 71 லட்சத்து 63 ஆயிரத்து 667 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 542 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில், தற்போது மருத்துவமன, தனிமைப்படுத்தும் மையங்களில் 4,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 490 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் பலன்றி தனியார் மருத்துவமனையில் ஒருவரும், அரசு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் என மேலும் 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 496 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2,35,532

  • கோயம்புத்தூர் 55755
  • செங்கல்பட்டு -52765
  • திருவள்ளூர் -44230
  • சேலம்-32746
  • காஞ்சிபுரம் -29,544
  • கடலூர் - 25,163
  • மதுரை -21,241
  • வேலூர் - 20984
  • திருவண்ணாமலை - 19495
  • திருப்பூர் - 18347
  • தஞ்சாவூர் -18113
  • தேனி -17156
  • கன்னியாகுமரி -17077
  • விருதுநகர் -16664
  • தூத்துக்குடி -16355
  • ராணிப்பேட்டை -16241
  • திருநெல்வேலி -15733
  • விழுப்புரம் -15265
  • திருச்சிராப்பள்ளி -14984
  • ஈரோடு -14,793
  • புதுக்கோட்டை -11652
  • நாமக்கல் - 11805
  • திண்டுக்கல் -11483
  • திருவாரூர் -11353
  • கள்ளக்குறிச்சி -10907
  • தென்காசி -8547
  • நாகப்பட்டினம் -8603
  • நீலகிரி - 8352
  • கிருஷ்ணகிரி -8165
  • திருப்பத்தூர் -7633
  • சிவகங்கை -6786
  • ராமநாதபுரம் -6472
  • தருமபுரி -6654
  • கரூர் -5503
  • அரியலூர் -4739
  • பெரம்பலூர் -2284
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 950
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1043
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க:கரோனா கால சிறப்பு ரயில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details