சென்னை, தாம்பரத்தை அடுத்த வண்டலூர் வெளிவட்ட சாலையில் டயர் உதிரிபாகங்கள் ஏற்றிய கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் முன்பக்கத்தில் தீடிரென தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த லாரி ஓட்டுநர் உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் லாரியின் முன்பக்கத்தில் தீ வேகமாகப் பரவ ஆரம்பித்தது.
சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் தீடீர் தீ! - லாரி தீ விபத்து
சென்னை: தாம்பரம் அருகே டயர் உதிரிபாகங்கள் ஏற்றி வந்த லாரியின் முன் பாகம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
lorry
தொடர்ந்து, தகவலறிந்து அங்கு வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். விசாரணையில், லாரியை ஓட்டிவந்தது சிவராமன் எனும் நபர் என்றும், சென்னையிலிருந்து மணிமங்கலத்தில் உள்ள டயர் கம்பெனிக்கு பொருள்களை எடுத்துச் சென்றபோது லாரியில் உள்ள பேட்டர் ஒயர்கள் மூலம் தீப்பற்றியதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் தீ விபத்து: உயிர் தப்பிய பயணிகள்