தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து - தீ விபத்து

தாம்பரத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது.

தாம்பரத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து
தாம்பரத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து

By

Published : Aug 15, 2022, 4:58 PM IST

சென்னை: தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை அருகே ஹீரோ இரு சக்கர வாகன ஷோரூம் இயங்கி வருகிறது. வழக்கம்போல் இன்று காலை ஷோரூமை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஷோரூம் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து

பின்னர் இது குறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் 12 புதிய இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

தாம்பரத்தில் இருசக்கர வாகன ஷோ ரூமில் தீ விபத்து

மேலும் கணினி, இருசக்கர வாகனங்களின் ஆவணங்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:அரும்பாக்கம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது

ABOUT THE AUTHOR

...view details