சென்னை: கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் விநாயகா எண்டர்பிரைசஸ் எனும் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் இலவசங்கள் அடங்கிய துண்டு பிரசூரங்களை விநியோகம் செய்து பொதுமக்களை 50 ஆயிரம் ரூபாய் முதல் லட்ச கணக்கில் முதலீடு செய்ய வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஏமாற்றியதாக கூறப்படுகின்றது.
நிறுவனர், உரிமையாளர் எனக் கூறப்படும் வசந்த் மற்றும் அர்ஜுன் ஆகியோரை முதலீடு செய்தவர்கள் கடந்த சில தினங்களாக தொடர்பு கொண்டபோது இருவரது கைபேசியும் அனைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கோடம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்றும் பிரயோஜனம் இல்லை. இறுதியாக உரிமையாளரின் இல்லம் அயப்பாக்கத்தில் இருப்பதை அறிந்து நள்ளிரவில் சென்றால் பிடித்து விடலாம் என எண்ணி அவரது வீட்டை சுற்றி வளைத்தனர்.