சென்னை அண்ணா சாலையில் கடந்த 8ஆம் தேதி இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் (19) மற்றும் முகமது சைபான்(19) ஆகிய இருவரை பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய் என்பது தெரிய வந்தது. மேலும் பைக் சாகசங்களில் ஈடுபடும் இவரை 14,000 பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதும் தெரிய வந்தது. அதேபோல் பைக் சாகசத்திற்கு பயன்படுத்திய பைக் இவரது நண்பருடையது என தெரிய வந்ததையடுத்து, பைக் எண்ணை வைத்து ஹைதராபாத்தில் இருந்த வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே தலைமறைவான பினோய், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, “திங்கள்கிழமை மட்டும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிக்னலில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரசுரங்கள் வழங்க வேண்டும்.