தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவடியில் பைக் மீது வேன் மோதி விபத்து - பொறியாளர் உயிரிழப்பு! - சென்னை இருசக்கர வாகன விபத்து

சென்னை: ஆவடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பொறியாளர் உயிரிழந்தார்.

Chennai Accident Cases  Tamilnadu Crime News  Chennai Crime News  A Engineer Dead By Bike Accident In Chennai  Chennai Bike Accident  சென்னை பைக் விபத்து  சென்னை மாவட்ட குற்றச் செய்திகள்  தமிழ்நாடு குற்றச் செய்திகள்  சென்னை இருசக்கர வாகன விபத்து  ஆவடி பைக் விபத்தில் பொறியாளார் உயிரிழப்பு
A Engineer Dead By Bike Accident In Chennai

By

Published : Dec 17, 2020, 2:02 PM IST

சென்னை, அண்ணாநகர், பெரியார் சாலையைச் சேர்ந்தவர் ஜான் சுந்தர் (19). பட்டயப் படிப்பு படித்துள்ள இவர், தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், இன்று காலை ஜான்சுந்தர் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்குப் புறப்பட்டார். அயப்பாக்கம்-திருவேற்காடு நெடுஞ்சாலை, எம்ஜிஆர் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

வேன் மோதி விபத்து

அப்போது, அவ்வழியாக வந்த வேன் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜான்சுந்தர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

வேன் ஓட்டுநர் கைது

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பூந்தமல்லி காவல் துறையினர் ஜான்சுந்தரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிந்து ரமேஷ் (43) என்ற வேன் ஓட்டுநரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியுடன் திருமணத்திற்கு வெளியேயான உறவில் இருந்தவரைக் கொன்றவருக்கு வலை!

ABOUT THE AUTHOR

...view details