சென்னை:நந்தனத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தின் இயக்குநர் நேற்றிரவு தனது பென்ஸ் காரில் அவரது குடும்பத்தாருடன் சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் திரைப்படத்தை பார்க்கச் சென்றுள்ளனர். அவர்களது கார் ஓட்டுநர் சேகர் என்பவர் அவர்களை திரையரங்கில் இறக்கி விட்டு திரையரங்கின் அருகே உள்ள கோயில் முன்பாக காரை நிறுத்தி விட்டு நின்றுள்ளார்.
அப்பொழுது அங்கு மது போதையில் இருந்த நபர் ஒருவர் அங்கு இருந்த குப்பைகளை ஒன்று சேர்த்து அதனை எரிக்க முயன்று உள்ளார். இதனை கண்ட கார் ஓட்டுநர் சேகர், இங்கு குப்பைகளை எரிக்கக் கூடாது எனக் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி சாலையிலேயே கட்டிப்பிடித்து சண்டையிட்டு உள்ளனர். இந்த மோதலில் மது போதையில் இருந்த நபருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கல்லால் பென்ஸ் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளார். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இருவரும் மாறி மாறி சாலையில் தாக்கிக் கொள்வதை பார்த்த பொதுமக்கள், காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மது போதையில் இருந்த நபரை சமாதானப்படுத்த முயன்றனர். பின்னர் அவரை பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.