சென்னையை அடுத்த பல்லாவரம் ராணுவ மைதானம் அருகே உள்ள சாலையில் நேற்றிரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் ஆண் உடல் ஒன்று கிடப்பதாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பல்லாவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், இறந்தவர் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஆனந்தன்(45) என்பது தெரியவந்துள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஆனந்தன், சில நாட்களாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார் எனவும், சில தினங்களுக்கு முன்பு உறவினர்களிடம் திருவண்ணாமலை செல்வதாகக் கூறிவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.