சென்னை: புது வண்ணாரப்பேட்டையில் திருநங்கைகள் மூலமாக குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று (செப்.24) நடைபெற்றது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை H-5 காவல் நிலையத்திற்குட்பட்ட காவலர்கள் சமூகநல கூடத்தில் வட சென்னை வண்ணாரப்பேட்டை சரக இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில் திருநங்கைகள் மூலமாக குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்.24) நடைபெற்றது.
இதில், சுனாமி குடியிருப்பு பகுதியிலுள்ள திருநங்கைகள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், இப்பகுதியில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுப்பது, முன்கூட்டியே தெரியப்படும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவது, திருநங்கைகள் மூலமாக குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.