தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் அருகே காவல்துறையினர் அவமானப்படுத்தி விட்டதாக கூறி கட்டட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை - தற்கொலை

தாம்பரம் அருகே காவல்துறையினர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி கட்டட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தாம்பரம் அருகே காவல்துறையினர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்
தாம்பரம் அருகே காவல்துறையினர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்

By

Published : May 26, 2022, 11:03 AM IST

சென்னை,தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் அஸ்தினாபுரம் மகேஷ்வரி நகரை சேர்ந்தவர்கள் ஆனந்தன்(34), பாண்டியம்மாள்(28) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனந்தன் கொத்தனார். பாண்டியம்மாள் வீட்டு வேலை செய்து வருகிறார்.

ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்துவிட்டு அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஆனந்தன் வழக்கம்போல் மது குடித்துவிட்டு அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாண்டியம்மாள் சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் ஆனந்தனை கண்டித்துள்ளனர்.

அப்போது குடிபோதையில் இருந்த ஆனந்தன் போலீசாரிடம் நீங்கள் என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கண்டித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தன், இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தபோது வீட்டின் படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் அவரது உடலை சிட்லபாக்கம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்த ஸ்டாலின் - அலுவலர்கள் அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details