சென்னை: கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் நேற்று எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அப்பொழுது ஒரு பெற்றோர் நீட் தேர்வை எப்பொழுது ரத்து செய்வீர்கள் என குரல் எழுப்பினார். அதற்கு ஆளுநர் அவர்கள் ஐ வில் எவர் நெவர் என பதில் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது மேடையில் பேசிய உதயநிதி, தமிழக மாணவர்களையும் மக்களையும் ஆளுநருக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசி இருந்தார். மேலும் பேசிய அவர், ஆளுநர் கருத்திற்கு எதிராக அதை சொல்வதற்கு நீங்கள் யார் என கேள்வி எழுப்பியதுடன், நீங்கள் என்ன மக்கள் பிரதிநிதியா? நீங்கள் ஒரு போஸ்ட்மேன் மட்டும்தான் எனவும் முதல்வர் சொல்வதை மத்திய அரசிடம் சேர்க்கும் பணியை மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டும். மரியாதை கொடுத்தால் அதை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் மேடையில் ஆளுநர் அவமதிக்கும் அளவிற்கு பேசியிருந்தார்.