சென்னை:தாம்பரத்தை சேர்ந்த சிறுவன் கோகுல் ஸ்ரீ செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறுவனின் தாயார் பிரியா தாம்பரம் கன்னடபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டரை லட்சம் சமூக பாதுகாப்பு துறை இழப்பீடு நிலையில் இருந்து ஏழரை லட்சம் ஆக மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார் மற்றும் இவர்களுக்கு குடியிருக்க வீடு வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.