தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை! - கல்லூரியில் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை

சென்னை: வரும் கல்வியாண்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய, மாநில அளவில் பொதுவான ஒரு தேர்வினை நடத்தி மாணவர்களைச் சேர்க்கலாம் எனப் பல்கலைக்கழக மானியக்குழு அமைத்த குழுவினர் பரிந்துரை அளித்துள்ளனர்.

பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை!
பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை!

By

Published : Apr 29, 2020, 12:14 PM IST

கரோனா தீநுண்மி பெருந்தொற்று காரணமாக, இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பை நிறைவுசெய்த மாணவர்கள் புதிதாகக் கல்லூரியில் சேருவதில் சிக்கல்கள் உருவாகின.

இதனைக் கருத்தில்கொண்டு, நடப்பு கல்வியாண்டு, அடுத்த கல்வியாண்டில் கல்லூரிகளைத் திறப்பது, தேர்வுகளை நடத்துவது, மாணவர் சேர்க்கை மேற்கொள்வது தொடர்பாக ஆராய பல்கலைக்கழக மானியக்குழு, ஹரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினை அமைத்தது.

அந்தக் குழுவினர் தங்களின் பரிந்துரைகளைப் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் வழங்கியுள்ளனர். அதன்படி, கரோனா பரவலால் அமலில் உள்ள முழு ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டதும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகப் பரிந்துரைகள் யு.ஜி.சி.யிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்கள், அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதிசெய்ய வேண்டும். மாணவர்களுக்கான பாடத்திட்டம் நடத்தப்படுவதை உறுதிசெய்வதுடன், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும். மாணவர்கள் வருகைப்பதிவேட்டில், ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்ட விடுமுறையை, அவர்கள் கல்லூரிக்கு வருவதாகக் கருத்தில்கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கலாம்.

ஊரடங்கு முடிந்தபின் நடைபெறும் தேர்வுகளுக்கான நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறைப்பதுடன், மதிப்பெண்களில் மாற்றம்செய்து தேர்வு நடத்தலாம். வாய்ப்புள்ள இடங்களில், இணையம் வாயிலாக, ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடத்தலாம்.

அப்படி, தேர்வு நடத்த இயலாத பகுதிகளில் நேரடியாகத் தேர்வு நடத்தலாம். வரும் கல்வியாண்டு, அடுத்த கல்வியாண்டில் வாரத்தில் ஆறு நாள்கள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படலாம்.

இறுதியாண்டு தவிர்த்து, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வெழுதுதல், ஒரு மதிப்பெண் முறையில் தேர்வுகளை நடத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மொத்த 100 மதிப்பெண்களில், 50 மதிப்பெண்கள் முந்தைய பருவ உள்மதிப்பெண் (internal marks) அடிப்படையிலும், மீதம் 50 மதிப்பெண்கள் முந்தைய சுழற்சி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டிற்கான பருவத்தேர்வை, ஜூன் மாத கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நடத்தி முடிக்க வேண்டும். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் வகுப்புகளைத் தொடங்கலாம்.

இந்தியா முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு, சில மாநிலங்களில் நடத்தி முடிக்கப்படவில்லை என்பதை அறிகிறோம். ஆகையால், வரும் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இளநிலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய, மாநில அளவில் பொதுவான ஒரு தேர்வினை நடத்தலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கவும், பல்கலைக்கழக மானியக்குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அடுத்த வாரம் அந்தக்குழு தனது அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details