சென்னை: இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு நான்கு எஸ்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் இருப்பில் உள்ளது. இதற்கான சேமிப்பு கிடங்கும் போதுமானதாக உள்ளது.
தமிழ்நாட்டில் 9 லட்சம் மெட்ரிக் அரிசி வீணாகி உள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தவறானவை. 92,500 கிலோ அரிசி மட்டுமே வீணாகியது. வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நெல் மற்றும் அரிசிகளை பாதுகாக்க நபார்ட் மற்றும் தனியார் பங்களிப்புடன் புதிய கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.