தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் மீது வழக்குப்பதிவு - Loganathan who tried to misbehave with the girl

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற போட்டோ கடை உரிமையாளர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் மீது- வழக்குபதிவு
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் மீது- வழக்குபதிவு

By

Published : Dec 20, 2022, 10:28 PM IST

சென்னை:திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 50 வயதான விதவை பெண் ஒருவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தங்களது தெருவில் பல வருடங்களாக போட்டோ கடை நடத்தி வரும் லோகநாதன்(45) என்பவர் நள்ளிரவில் மதுபோதையில் நிர்வாணமாக நடந்து செல்வதை, வாடிக்கையாக வைத்திருப்பதாகவும், பல பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதேபோல கடந்த 16ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது இரவு நேரத்தில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்த லோகநாதன் தன்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயன்றதாகவும், உடனே தான் கூச்சலிட்டதால் தப்பியோடிய லோகநாதன், அதன் பிறகு தலைமறைவாகி இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி லோகநாதன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள லோகநாதனை கைது செய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர் மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details