சென்னைதாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் மல்லீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் அஸ்வின்(25). ஆயுர்வேத மருத்துவரான இவர், இன்று (செப்.17) வழக்கம்போல் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரத் பொறியியல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, காரிலிருந்து புகை வந்துள்ளது.
இதனை உணர்ந்த அஸ்வின், உடனடியாக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது கார் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. பின்னர் இது குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.