தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நடுரோட்டில்  பற்றி எரிந்த கார் - திருநீர்மலை அருகே சாலை

சென்னை மதுரவாயல் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அருகே சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சென்னை அருகே சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

By

Published : Oct 1, 2022, 5:44 PM IST

சென்னை: தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை, திருநீர்மலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரின் முன் பகுதியிலிருந்து புகை வர தொடங்கியது. இதனைக்கண்ட ஓட்டுநர் சதீஷ் காரை சாலையின் ஓரம் நிறுத்தினார். அதன்பின் அவரும் காரில் பயணித்த பிரதீப் என்பவரும் காரில் இருந்து இறங்கி தூரமாக சென்றனர்.

சென்னை அருகே சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி எரிய தொடங்கியது. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாம்பரத்தில் இருந்து சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. அதோடு மதுரவாயல் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் காரைக்குடியில் இருந்து நொளம்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்ததாகவும் இன்று வண்டலூர் செல்ல காரில் வந்த போது தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் லாரி கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details