சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை பிராட்வே பகுதியில் இருந்து, மூலக்கடை நோக்கிச்சென்ற 64c என்ற மாநகரப்பேருந்து, வியாசர்பாடி பகுதியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்றது.
அப்போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரின் காரணமாக பேருந்து செல்ல முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த போக்குவரத்துப்போலீசார், மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த பேருந்தை கட்டியிழுத்து வெளியே கொண்டு வந்தனர்.