தமிழ்நாடு

tamil nadu

மழைக்கு ஒதுங்கிய காவலர் மீது அரசு பேருந்து மோதல் - உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்!

By

Published : Mar 24, 2023, 7:18 AM IST

தாம்பரம் அருகே மழைக்காக ஒதுங்கி நின்ற காவலர் மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

A bus collided with a policeman near Tambaram, he died on the spot
தாம்பரம் அருகே காவலர் மீது பேருந்து மோதி சம்பவ இடத்திலே உயிரிழப்பு

செங்கல்பட்டு: பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). காவலரான நாகராஜ், ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தாம்பரம், மதுரவாயலூர் பைபாஸ் பகுதியில் இருக்கும் ஆலயம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென மழை பெய்ததால், இருசக்கர வாகனத்துடன் சாலை ஓரம் ஒதுங்கி நின்று உள்ளார்.

அப்போது செஞ்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த 122 தடம் எண் கொண்ட அரசு பேருந்தை, செஞ்சியை சேர்ந்த ஓட்டுனர் காளிதாஸ் என்பவர் ஓட்டி வந்து உள்ளார்.

அப்பொழுது பேருந்துக்கு இடையே திடீரென இருசக்கர வாகனம் ஒன்று சாலையை கடந்துள்ளது. இதனால், பேருந்து ஓட்டுனர் வலது பக்கமாக வாகனத்தை திருப்பி உள்ளார். இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி பேருந்து மழைக்காக ஓரமாக ஒதுங்கி நின்ற காவலர் நாகராஜன் மீது அதிவேகத்தில் மோதி, அருகில் இருந்த சென்டர் மீடியன் மேல் ஏறி நின்று உள்ளது.

இதில் காவலர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதிர்ஷ்டவசமாக அரசு பேருந்தில் வந்த பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய் போலீசார், காவலர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பேருந்து ஓட்டுனரிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.

இதையும் படிங்க:புளியங்குடி தெருவிற்கு “லெப்டினன்ட் பார்த்திபன் தெரு” எனப்பெயர் மாற்றம் - தமிழக அரசு

ABOUT THE AUTHOR

...view details