தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தங்கை உயிரிழப்பு - A brother and sister were killed when a lorry collided with a two-wheeler

சென்னை: திருநின்றவூர் அருகே லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தங்கை உயிர்யிழப்பு
லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தங்கை உயிர்யிழப்பு

By

Published : Jan 3, 2021, 4:52 PM IST

சென்னை திருநின்றவூர் அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் வெங்கடேசன் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தங்கை சத்தியபிரியா திருநின்றவூரில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று (ஜன.03) வெங்கடேசன் தனது தங்கையை திருநின்றவூரில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தங்கையுடன் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த சந்தியாவையும் வேலையில் விட மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

வாகனம் நத்தம்பேடு கிராமத்தை கடந்து பெரியப்பாளையம் சாலையில் நுழையும்போது அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வெங்கடேசனும், சத்தியபிரியாவும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சந்தியா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தங்கை உயிரிழப்பு

விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். பெரியப்பாளையம் சாலையில் படுத்து கிடந்த கால்நடைகள் திடீரென சாலையின் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து லாரி ஓட்டுனர் இருசக்கர வாகனம் மீது லாரியை மோதியதாக கூறப்படுகின்றது. திருநின்றவூர் சுற்றுவட்டாத்தில், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சாலையிலேயே சுற்றித் திரிவதால் தொடர் விபத்துகள் நடைபெறுகின்றன.

இதையும் படிங்க:காரில் இருந்து இறங்கிய போது, மயங்கி விழுந்த சதானந்த கவுடா!

ABOUT THE AUTHOR

...view details