தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவனுக்கு ரத்த வாந்தி: தரமற்ற குளிர்பானங்களால் தொடர் பாதிப்பு - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னையில் வீட்டின் அருகேயுள்ள கடையில் குளிர்பானம் குடித்த சிறுவன் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/21-September-2021/13122270_sudharsan1.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/21-September-2021/13122270_sudharsan1.jpg

By

Published : Sep 21, 2021, 6:43 AM IST

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் லக்ஷ்மன் சாய் (6). சிறுவன் சாய் தனது வீட்டின் அருகே உள்ள கடையில் நெகிழிப் புட்டியில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த உடனே மயக்கம் வருவதாகச் சிறுவன் கூறியுள்ளார்.

அவரது பெற்றோர் அந்தக் குளிர்பானத்தைச் சோதித்துப் பார்த்ததில் வேதிப்பொருள் வாசனை வரவே, அதனை கீழே துப்பி வாந்தி எடுக்கவைத்துள்ளனர். பின்னர், அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபொழுது, சிறுவன் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

சிறுவன் வாங்கி அருந்திய குளிர்பான பாட்டில்

இதையடுத்து, சிறுவன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மருத்துவர்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்து, குளிர்பானத்தின் தரத்தை சோதனைக்குள்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, இதே குளிர்பானத்தைக் குடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உடல் வலி நிவாரண மாத்திரையில் போதை - விற்பனை செய்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details