தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி டீ கப், பிளாஸ்டிக் தட்டுகள் கேரிபேக் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் அரசு தடைவிதித்தது. இதனை மீறி பிளாஸ்டிக் பொருள்களை விற்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
லேஸ், குர்குரே அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை! - single use plasic ban
சென்னை: கடைகளில் விற்கப்படும் லேஸ், குர்குரே போன்றவற்றை அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
![லேஸ், குர்குரே அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை! plastic bag ban in tamilnadu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7550094-thumbnail-3x2-daj.jpg)
plastic bag ban in tamilnadu
இந்நிலையில், தற்போது லேஸ், குர்குரே போன்ற நொறுக்குத்தீனிகளை அடைக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனுடன் மேலும் சில பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
- வனவியல் மற்றும் தோட்டக்கலை நர்சரிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தாள்கள்
- பால் மற்றும் பால் பொருட்கள் (பால் பொருட்கள்), எண்ணெய், மருந்து, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்
- ஏற்றுமதி நோக்கத்திற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள்