தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாண்டஸ் புயலால் காரின் மீது விழுந்த 50 வருட பழமையான மரம்!

அண்ணா நகரில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது மரம் விழுந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளது

மாண்டஸ் புயலால் காரின் மீது விழுந்த 50 வருட பழமையான மரம்
மாண்டஸ் புயலால் காரின் மீது விழுந்த 50 வருட பழமையான மரம்

By

Published : Dec 13, 2022, 11:19 AM IST

Updated : Dec 13, 2022, 11:33 AM IST

சென்னை:மாண்டஸ் புயலை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை அண்ணா நகர் சாந்தி காலனி பிரதான சாலையில் அமைந்துள்ள 50 வருடகால பழமையான மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தது.

அப்போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்கள் மீது மரம் விழுந்தது. இதனால் உடனடியாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மரத்தின் அடியினுள் சிக்கிக்கொண்ட காரை மீட்க தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் சிக்கிய காரை போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த நிலையில் மரம் விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மரம் விழுந்ததினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: வழக்கை இழுத்தடிக்க தேவையற்ற மனு தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம் - ஐகோர்ட் அதிரடி

Last Updated : Dec 13, 2022, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details