தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் கை .. விரல்கள் நசுங்கிய சோகம் - Crushed by escalator at Chennai airport

சென்னை விமான நிலையத்தில் 4 வயது சிறுவனின் கை விரல்கள், எஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 29, 2022, 12:12 PM IST

சென்னை: அந்தமான் விமானத்தில் பயணிக்க தாத்தா, பாட்டியுடன் எக்ஸ்கலேட்டரில் சென்ற 4 வயது பேரன், கை விரல்கள், எக்ஸ்கலேட்டரில் எதிா்பாரதவிதமாக நசுங்கின. இதனால் அந்த குடும்பத்தினா், அந்தமான் பயணத்தை ரத்து செய்துவிட்டு, குரோம்பேட்டை தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பேரனை அழைத்துச் சென்றனா்.

அந்தமானைச் சேர்ந்த ஐசக் என்பவர் தீபாவளி விடுமுறையில் மனைவி, மகன், பேரக்குழந்தை ஆகியோருடன் தமிழ்நாட்டிற்கு உறவினா் வீட்டிற்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து இன்று (அக்.29) குடும்பமாக அந்தமான் திரும்ப முடிவு செய்தனா்.

அதன்படி நேற்று சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஸ்பைஜெட் பயணிகள் விமானத்தில் அந்தமான் செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனா். போா்டிங் பாஸ் வாங்கிவிட்டு, பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்காக எஸ்கலேட்டர் மூலம் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது ஐசக்கின் பேரன் ஜெய் உடன் இடது கை விரல்கள் எதிர்பாராத விதமாக எக்ஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கியது. உடனடியாக அவசர அவசரமாக, விமான ஊழியர்கள் எஸ்கலேட்டரை நிறுத்தினர். அதோடு சிறுவன் ஜெய் உடன் உட்பட ஐசக் குடும்பத்தினரை, எஸ்கலேட்டர் இருந்து இறக்கியதை அடுத்து, சென்னை விமான நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதோடு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றால் நல்லது என்று பரிந்துரைத்தனர். இதையடுத்து ஐசக் தன்னுடைய குடும்பத்தினரின் அந்தமான் பயணத்தை ரத்து செய்துவிட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்தமான் செல்ல வேண்டிய தனியாா் பயணிகள் விமானம் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து விமானநிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையும் படிங்க: சாலையில் கிடந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தவர்களுக்கு பாரட்டு..!

ABOUT THE AUTHOR

...view details