தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொட்டில் கயிறு கழுத்தில் சிக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்! - தொட்டில் கயிறு கழுத்தில் சிக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

சென்னை: தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதன் கயிறு இறுக்கியதில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

A 12-year-old boy died by stuck in the rope neck
A 12-year-old boy died by stuck in the rope neck

By

Published : Apr 25, 2020, 1:17 PM IST

சென்னை எழும்பூர் பி.சி.ஓ. சாலையில் வசித்து வருபவர் அப்துல் ஹாதி (57). இவரது மகளுடைய மகன் முகமது தக்கி (12) தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் தக்கியின் தந்தை அகமத் துபாயில் பணிப்புரிந்து வருவதால். ஒரே வீட்டில் இவர்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

குறிப்பாக ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடியுள்ளதால் தக்கி வீட்டிலேயே விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு தக்கி வீட்டில் உள்ள குழந்தைகள் தொட்டிலில் விளையாடி கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக தொட்டிலின் கயிறு அவரின் கழுத்தை இறுக்கி உள்ளது.

இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அவரது தாய் உடனே தக்கியை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக சேத்துபட்டு பகுதியில் உள்ள மேத்தா மருத்துவமனையில் 21ஆம் தேதி சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தக்கி இன்று உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தக்கியின் உடலை உடற்கூறாய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details