தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

9Am top 10 News
9Am top 10 News

By

Published : Oct 10, 2020, 9:02 AM IST

வன்முறையற்ற சமூகத்தை உருவாக்க 'கேடயம்' செயல்திட்டம்!

பெண்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கேடயம் என்ற செயல்திட்டத்தினை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தொடங்கிவைத்தார்.

அரசின் விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகள்: கரோனா தொற்று பரவும் அபாயம்

தமிழ்நாடு அரசின் விதிகளை மீறி சட்டவிரோதமாக தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் எடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அவசரம் காட்டும் அரசு - நீதிபதிகள் வேதனை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வி துறை அலுவலருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பட்டறை தொழிலாளி தற்கொலை விவகாரம் - குற்றவாளியை கைது செய்யக்கோரி விஸ்வகர்மா மக்கள் கட்சியினர் வலியுறுத்தல்

சீட்டு பணம் கட்ட முடியாததால் விஷம் குடித்து நகை பட்டறை தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விஸ்வகர்மா மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கத்தியை காட்டி வழிப்பறி - 3 இளைஞர்கள் கைது

வாகனத்தில் சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை துறைமுகம் வழியாக பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!

பெங்களூரு ரோஸ் வெங்காயம், கிருஷ்ணபுரம் வெங்காய வகைகளை சென்னை துறைமுகத்தின் வழியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய வர்த்தக அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.


மலை வாழை விலை வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை!

கொடைக்கானல் அடுக்கம் மலைக்கிராமத்தில் மலை வாழை சந்தையில் கொள்முதல் விலை மிக குறைவாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸுக்கு உத்தரவிட்ட கோர்ட்!

விவசாயிகளை களங்கப்படுத்தும் நோக்கில் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் 2020: ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

டெல்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

ABOUT THE AUTHOR

...view details