தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் விதிகளை மீறி ஆட்டோ இயக்கியதாக ஒரே நாளில் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. - சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை

சென்னையில் விதிகளை மீறி ஆட்டோ இயக்கியதாக ஒரே நாளில் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில்
சென்னையில்

By

Published : Apr 21, 2022, 8:22 AM IST

சென்னையில் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஓடும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போக்குவரத்து விதிகளையும், விதிமுறைகளையும் மதிக்காமல் அலட்சியமாக செயல்படுவதாகவும், பயணிகளிடம் அதிக கட்டணத்தைக் கூறி வாகனத்தை இயக்க மறுப்பதாகவும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று(ஏப்ரல் 20) காலை முதல் சென்னை முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கைகள் நடத்தப்பட்டன.

அப்போது விதிகளை மீறி செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக சீருடை அணியாமல் வாகனத்தை இயக்கியதாக 570 வழக்குகளும், ஓட்டுநர் இருக்கையில் இருவர் அமர்ந்து பயணம் செய்ததாக 189 வழக்குகளும், அதிக நபர்களை ஏற்றிச் சென்றதாக 148 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

அதிக கட்டணம் கோரியதாக 42 வழக்குகளும், பயணத்திற்கு வர மறுத்ததாக 9 வழக்குகளும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு வழக்கும் என மொத்தம் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இனிவரும் காலங்களிலும் தொடரும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க :ஐபிஎல் போட்டியை போலி செயலி மூலம் ஒளிபரப்பிய பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details