தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகரம் அதை சுற்றியுள்ள புறநகா் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும் கட்டுக்கடங்காமல் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ், வெளிமாநில பயணிகளுக்கு கட்டாய இ பாஸ் முறை போன்றவைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதைப்போன்ற கடுமையான கட்டுப்பாடுகள், அதோடு சென்னை மற்றும் புறநகரில் வேகமாக பரவும் கரோனா தொற்று பீதியால் சென்னைக்கு வரும் விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 92 விமானங்கள் ரத்து!
சென்னை: கரோனா தொற்று இரண்டாம் அலையின் கடுமையான தாக்கத்தால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று (மே.4) போதிய பயணிகள் இல்லாமல் 92 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து செல்லும் விமான பயணிகள் எண்ணிக்கை இன்று 3 ஆயிரமாகவும், அதைப்போல் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 2,300 ஆகவும் குறைந்துள்ளது.
அதோடு சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் மும்பை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, இந்தூா், அந்தமான், புவனேஸ்வா், மதுரை, திருச்சி, கோவா உள்ளிட்ட 92 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னையிலிருந்து மும்பை 5 விமானங்கள், டெல்லி 4 விமானங்கள், மதுரை 4, கோவை 4, அந்தமான் 4, கொச்சி 3, ஹைதராபாத் 3, திருச்சி 2, விஜயவாடா 2, மற்றும் கோவா, அகமதாபாத், விசாகப்பட்டிணம், திருவனந்தபுரம், புனே, கவுகாத்தி உள்ளிட்ட 46 விமானங்கள், அதைப்போல் சென்னைக்கு வரவேண்டிய 46 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 92 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் இன்று ரத்து செய்யப்பட்டன.