தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மழையால் சாய்ந்த 917 மரங்கள் - தென்மேற்கு பருவமழை

சென்னை: மார்ச் ஒன்றாம் தேதிமுதல் இன்று காலை வரை 917 மரங்கள் மழையால் சாய்ந்துள்ளன என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

917 trees uprooted by rains in Chennai
917 trees uprooted by rains in Chennai

By

Published : Dec 3, 2020, 1:07 PM IST

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை முடிந்து தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதுடன் நிவர் புயல் உருவாகி சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. புயல் காரணமாக அதிக காற்று வீசியதால் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன.

தற்போது புரெவி புயல் உருவாகியதைத் தொடர்ந்து, சென்னையில் மழை, காற்று பலமாக வீசிவருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதையடுத்து சாய்ந்து விழுந்த மரங்களின் புள்ளிவிவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 37 மரங்கள் சாய்ந்துள்ளன. தென்மேற்குப் பருவமழை காலங்களான ஜூலை 1ஆம் தேதிமுதல் அக்டோபர் 28ஆம் தேதிவரை 185 மரங்கள் சாய்ந்துள்ளன.

அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி தற்போதுவரை வடகிழக்குப் பருவமழை நடைபெற்றுவருகிறது. இந்நாள் வரையிலும் மொத்தம் 695 மரங்கள் சாய்ந்துள்ளன. சென்னையில் தற்போதுவரை மொத்தமாக மார்ச் 1ஆம் தேதிமுதல் இன்று காலை வரை 917 மரங்கள் சாய்ந்துள்ளன.

மேலும் நேற்று உருவாகிய புயல் காரணமாக நேற்றுமுதல் இன்று காலை வரை 11 மரங்கள் சாய்ந்துள்ளன. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ஆறு மரங்கள் சாய்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் மரங்கள் விழுந்து 7 கார்கள், 2 ஆட்டோக்கள் சேதம் - காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details