தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ : குறிக்கோளுடன் பயணிக்கும் சுகாதாரத்துறை - சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டத்தின் மூலம் 91,538 கிலோ எடையுள்ள உயிர் மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

’நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ : குறிக்கோளுடன் பயணிக்கவிருக்கும் சுகாதாரத்துறை
’நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ : குறிக்கோளுடன் பயணிக்கவிருக்கும் சுகாதாரத்துறை

By

Published : Apr 3, 2022, 7:14 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அளவிலான மருத்துவமனைகள், உயர் சிகிச்சைகளை அளிக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 2672 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனைகள் அனைத்திலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் நபர்கள் புற நோயாளிகளாகவும், 46,000 நபர்கள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனர். மேலும், 1,500 குழந்தைப் பிறப்புகளும் நிகழ்கின்றது. பிற துறைகளின் உதவியுடன் மருத்துவமனை வளாகங்களை தூய்மைப்படுத்தவும், பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’: “நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற குறிக்கோளுடன் கூடிய இப்பணி ஏப்.1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை என இவ்வியக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆண்டு முழுவதும் பராமரிக்கப்படும். இவ்வியக்கம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 1 2022 அன்று ஒரு நாளில் தமிழ்நாட்டில் 5,120 சுகாதாரத்துறை பணியாளர்கள், 2,179 உள்ளாட்சியமைப்பு ஊழியர்கள் மற்றும் 1,134 தொண்டு நிறுவன பணியாளர்களும் இச்சேவையில் உட்படுத்தப்பட்டு 6,596 கழிவறைகள் சுத்தம் செய்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்தூய்மை இயக்கத்தின் மூலம் முதல் நாளில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில், 34,00,235 சதுர அடி மருத்துவமனை பரப்புகள் சுத்தம் செய்யப்பட்டுப் பராமரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் 91,538 கிலோ எடையுள்ள உயிர் மருத்துவக் கழிவுகளும் நெறிமுறைகளின்படி சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


ABOUT THE AUTHOR

...view details