சென்னை: நெல்லையில் பள்ளிக்கூட கழிவறை சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, சென்னை திருவல்லிக்கேணியில் லேடி வெலிங்டன் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் லால் பகதூர் உள்ளிட்டோர் ஆய்வுமேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் லால் பகதூர், "ஆயிரம் 448 அரசுப் பள்ளிகள் சென்னையில் உள்ளது. அதனை ஆய்வுசெய்ய 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.