கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா நிவாரண நிதி கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய 9 வயது சிறுவன்! - salem news
சேலம்: 'டேப்' வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதன்படி, சேலம் சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் - சரண்யா தம்பதியரின் ஒன்பது வயது மகன் மௌலித் சரண், ஆன்லைன் வகுப்பிற்காக டேப் வாங்க உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.2,060 ரொக்கப் பணத்தை, முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் வழங்கினார். சிறுவனின் இந்தச் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து சிறுவன் சரண் கூறுகையில், "கரோனாவால் ஆக்சிஜன் இல்லாமல் உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன்" என்றார்.