தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

300 கிலோ ஹெராயின் கடத்தல் வழக்கு: NIA சிறப்பு நீதிமன்றத்தில் 9 இலங்கைத் தமிழர்கள் ஆஜர்

விழிஞ்ஞம் ஹெராயின் கடத்தல் வழக்கில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, 9 இலங்கை தமிழர்கள் சென்னையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 20, 2022, 6:29 PM IST

300 கிலோ ஹெராயின் கடத்தல் வழக்கு: NIA சிறப்பு நீதிமன்றத்தில் 9 இலங்கைத் தமிழர்கள் ஆஜர்

சென்னை: கேரள மாநிலம், விழிஞ்ஞம் கடற்கரைப் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு 300 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள், பயங்கர ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகின்றது. இதன் எதிரொலியாக, மேலும் கைதான 9 பேர் சென்னை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (டிச.19) ஆஜர்படுத்தப்பட்டனர்.

சர்வதேச போதைக் கும்பலுடன் தொடர்புஇருப்பதாக, திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புடாய் என்கிற குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்பராஜா, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது யாமின், அழகப்பெருமாள் சுனில் காமினி பொன்சேனா, ஸ்டான்லி கென்னடி பெர்னான்டோ என்கிற எழிலோன், லடியா சந்திர சேனா, தனுக்கா ரோஷன், வெள்ள சாரங்கா, திலீபன் ஆகிய 9 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், இதுகுறித்து தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க: விழிஞ்ஞம் ஹெராயின் கடத்தல் வழக்கு: இலங்கை தமிழரை கைது செய்த என்ஐஏ

ABOUT THE AUTHOR

...view details